புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-02 மற்றும் ஆசாதி-சாட் ஆகிய இரு செயற்கைக்கோள்கள் SSLV-D1 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் EOS-02 மற்றும் சிறிய செயற்கைக்கோளான ஆசாதி-சாட் ஆகியவை SSLV-D1 ராக்கெட் மூலம் இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது.ஆந்திரப்பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சத்தீஸ்தவான் ஏவுதளத்தில் இருந்து காலை மணி 9.18-க்கு இந்த ராக்கெட் ஏவப்பட்டது.இதில் ஆசாதி-சாட்-ஐ, நாடு முழுவதும் 75 ஊரக பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளை சேர்ந்த 750 மாணவிகள் வடிவமைத்திருந்தனர்.இந்த ஆண்டு 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, மாணவிகள் இடையே விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில், இந்த வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது.

செயற்கைக்கோள்களை ஏந்திச்சென்ற சிறிய வகையிலான SSLV-D1 ராக்கெட், 34 மீட்டர் உயரம் கொண்ட 120 டன் எடையிலானது என்றும், சுமார் 500 கிலோ எடையை சுமந்து செல்லக்கூடியது.

திவாஹர்

Leave a Reply