ராணுவத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பினை பெற்றுள்ளதாக பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் கூறியுள்ளார்.இன்று மாநிலங்களவையில் கேள்விநேரத்தின்போது இதனைத் தெரிவித்துள்ள அவர், கோவிட் பாதிப்பு காரணமாக கடந்த நிதியாண்டில் நியமனங்கள் மேற்கொள்ளப்படவில்லை என்று தெரிவித்தார்.தற்போது கோவிட் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் மீண்டும் நியமன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று திரு அஜய்பட் கூறினார்.
திவாஹர்