வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வலுசேர்த்ததாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாட்டின் சுதந்திரப் போராட்டத்திற்கு வலுசேர்த்ததாக பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார்.

சமூக வலை தளத்தில் இக்கருத்தை பதிவு செய்துள்ள அவர், தேசப்பிதா மகாத்மா காந்தி தலைமையில் இந்த இயக்கத்தில் பங்கேற்ற விடுதலைப் போராட்ட வீரர்களை நாடு ஒருபோதும் மறவாது என்று கூறியுள்ளார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் மகாத்மா காந்தி பங்கேற்ற புகைப்படத்தையும் அதன் முக்கியத்துவத்தை விளக்கும் வகையிலான காணொலியையும் பிரதமர் வெளியிட்டுள்ளார்.

ஒற்றுமையே நாட்டின் வலிமை என்பதை வெள்ளையனே வெளியேறு இயக்கம் உணர்த்தியுள்ளதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் நாட்டின் விடுதலைக்காக தன்னலமற்று போராடிய வீரர்களுக்கு இந்நாளில் தலை வணங்குவதாக கூறியுள்ளார்.

திவாஹர்

Leave a Reply