பிரதமரின் மலிவு விலை மக்கள் மருந்தகங்கள் மூலம் குறைந்த செலவில் தரமான மருந்துகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாடுமுழுவதும் 8 ஆயிரத்து 784 மருந்தகங்கள் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த மருந்தகங்கள் காரணமாக ஏழை மக்களின் சிகிச்சை செலவுகள் வெகுவாக குறைந்துள்ளதாகவும், மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
எஸ்.சதிஸ் சர்மா