ஆண்டுதோறும் நடைபெறும் 43 நாள் அமர்நாத் யாத்திரை இன்று நிறைவு பெற்றது.

ஆண்டுதோறும் நடைபெறும் 43 நாள் அமர்நாத் யாத்திரை இன்று நிறைவு பெற்றது.இந்நிகழ்வை ஒட்டி, ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா யாத்திரிகர்களுடன் இணைந்து சமபந்தி வழிபாடு செய்தார்.

இந்த யாத்திரையில் 3 லட்சம் பேர் பங்கேற்றதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.ஜூன் 30ஆம் தேதி தொடங்கிய யாத்திரை, பகல்காம் மற்றும் பல்தால் வழியாக பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்டது.

மோசமான வானிலை காரணமாக, ஒருமுறை மட்டுமே யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.யாத்திரிகர்களின் பாதுகாப்புக்காக இருப்பிடம் காட்டும் வசதியுடன் கூடிய அடையாளம் வழங்கப்பட்டதை அடுத்து எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை.

கோவிட் தொற்று காரணமாக, கடந்த இரண்டாண்டுகளாக நடைபெறாமல் இருந்த யாத்திரை வெற்றிகரமாக நடைபெற்றதாக யாத்திரிகரிகள் கூறினர்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply