போப்பாண்டவர் பிரான்ஸிஸை சந்திப்பதற்காக, இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இத்தாலி சென்றுள்ளார்!

slmahinda rajapatcha-italy visit1 slmahinda rajapatcha-italy visitகத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத்லைவர் போப்பாண்டவர் பிரான்ஸிஸ் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம்  இலங்கைக்கு வர இருக்கிறார். இது தொடர்பான உத்தியோகபூர்வமான அழைப்பினை உறுதி செய்வதற்காக நேற்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச இத்தாலி சென்றுள்ளார்.

இத்தாலி நேரப்படி இரவு 7 மணிக்கு ரோம் ஃபியூமிசினோ விமான நிலையத்தை சென்றடைந்த அவரை, வத்திகான் பிரதான அதிகாரி ஜோசோ வெத்தன் மற்றும் இத்தாலிக்கான இலங்கையின் தூதுவர் நாவலகே போர்னாட் குரே ஆகியோர் வரவேற்றனர்.

இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச, இன்று வத்திகானில் போப்பாண்டவர் பிரான்ஸிஸை அப்போஸ்தலர் மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இதனை தொடர்ந்து வத்திகான் அரசின் பிரதம செயலாளர் மற்றும் பிரதமர் கர்தினால் பியேத்ரோ பெரோலின் ஆகியோரையும் சந்திக்க உள்ளார்.

-ஆர்.மார்ஷல்.