தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி பயணம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காத நிலை உள்ளது. இந்நிலையில், டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து இது தொடர்பாக பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக இன்று இரவு 9.30 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். நாளை காலை 10.30 மணிக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தங்கரை சந்திக்கிறார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply