இலங்கை, வடமாகாணத்தில் 3 மாவட்டங்களில் மட்டும் தமிழ் மக்களுக்கு சொந்தமான சுமார் 28,316 ஏக்கர் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிலத்தில் பூர்வீகமாக வாழ்ந்த மக்கள் இடம் பெயர்ந்து உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் அகதிகள் முகாம்களிலும் வாழ்ந்து கொண்டிருப்பதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மாகாண சபையில் எதிர்வரும் 9 ஆம் தேதி நில அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு தொடர்பில் ஆராய்வதற்கான சிறப்பு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், அதன் முதற்கட்டமாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் கிளிநொச்சி முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய 3 மாவட்டங்களிலும் மேற்படி அளவு நிலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
-எஸ்.சதிஸ் சர்மா.