கடைக்கோடி மனிதருக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அடிப்படையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பிஜேபி அலுவலகத்தில் பஞ்ச்கமல் திட்டத்தை அவர் தொடங்கி வைத்து உரையாற்றினார்.நாட்டின் வளர்ச்சியை மையமாக வைத்தே பிஜேபியின் அரசியலும் நடவடிக்கைகளும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.
பிஜேபியின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் கொள்கைகள் பிற அரசியல் கட்சிகளிடமிருந்து மாறுபட்டது என்றும் அவர் கூறினார்.இந்நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் மனோகர் லால், அக்கட்சியின் மாநிலத்தலைவர் ஓம் பிரகாஷ் தங்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
எஸ்.சதிஸ் சர்மா