சென்னையில் விரைவில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளது!-மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் .

சென்னையில் விரைவில் 100 மின்சார பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு சிவசங்கர் கூறியுள்ளார்.புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்திற்கு புதிதாக 500 மின்சார பேருந்துகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.முதற்கட்டமாக சென்னையில் 100 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் இத்திட்டம் வெற்றி அடைந்த பின்னர் மாநிலம் முழுவதும் மின்சாரப் பேருந்துகள் இயக்க தொடர்ந்து புதிய பேருந்துகள் வாங்கப்படும் என்று தெரிவித்தார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முதற்கட்டமாக சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாகவும், விரைவில் மாநிலம் முழுவதும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றும் சிவசங்கர் கூறினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply