காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு மாநில அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது – மாநில அமைச்சர் மா சுப்பிரமணியன்.

காசநோய் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக மாநில மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் 65வது ஆண்டு விழாவில் காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு காணொலியை அவர் இன்று வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகளவில் 41% பேர் காசநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

வரும் 2025ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலும் ஒழிப்பதற்காக மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருவதாக அவர் கூறினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply