தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் அரசு பொருட்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவவர் எம். ரவி குமார் துவக்கி வைத்தார். இப்பொருட்காட்சி 4.10.2014 தொடங்கி 45 நாட்கள் தொடர்ந்து நடைபெறும்.
பொருட்காட்சியை துவக்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.ரவி குமார் தெரிவித்ததாவது. இப்பொருட்காட்சியில் 16 அரசுத்துறைகளும், 8 அரசு சார்பு துறைகளும் பங்கேற்கின்றனா. அரசுத்துறை அலுவலர்கள் மக்களை கவரும் விதத்தில் சிறப்பாக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்றாண்டுகளில் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள, அரசின் சாதனைகள் துறை வாரியாக ஏழை ஏளிய மக்கள் பயன்படும் வகையில் திட்டங்கள் மற்றும்; அதனை பெறும் முறைகள் ஆகியவை விளக்கப்பட்டு புகைப்படங்கள் மற்றும் மாதிரிகளும் வைக்கப்பட்டுள்ளது.
வ.உ.சி கல்லூரி மைதானத்தில் நடைபெறுவுள்ள இப்பொருட்காட்சியில் பொது மக்களுக்கு தேவையான அனைத்து வீட்டு உபயோகப்பொருட்கள், மகளிர் அழகு சாதன பொருட்கள், துணிக்கடைகள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் ஆகியன விற்பனை செய்யப்படும்.
மேலும், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை கவரும் பொழுது போக்கு அம்சங்களான ராட்டிணங்கள், டோரா டோரா போன்ற 15 வகையான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், டெல்லி அப்பளம், பானி பூரி, பாப்கான், பஞ்சு மிட்டாய், ஜஸ் கீரிம், சைவ, அசைவ உணவு கடைகள் அமைக்கப்படவுள்ளன.
நாள்தோறும் கலையரங்கில் கிராமிய கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், மாணவ, மாணவிகளின் கண்கவர் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் சாதனை விளக்க குறும்படங்கள் காண்பிக்கபடும். தூத்துக்குடி மக்களுக்கு நல்ல பொழுது போக்கு அமசங்கள் நிறைந்ததாக அரசு பொருட்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
-பி.கணேசன் @ இசக்கி.