மகளிர் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில், சுகாதாரத் துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா

மகளிர் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில், சுகாதாரத் துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. மன்சுக் மாண்டவியா கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்திய தொழில் கூட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘மகளிர் நலன்’ குறித்த கருத்தரங்கில், காணொலி வாயிலாக உரையாற்றிய அவர், பெண்கள் சந்திக்கும் உடல்நலக் குறைபாடுகளுக்கு நவீன மருத்துவ சாதனங்கள் உதவியுடன் சிகிச்சை அளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

ஆயுஷ்மான் பாரத் சுகாதார கட்டமைப்பு திட்டத்தின் கீழ், மகளிருக்கான பல்வேறு மருத்துவ வசதிகளை மத்திய அரசு மேம்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தீவிர சிகிச்சை மையம், பரிசோதனைக் கூடங்கள், நோய் கண்டறியும் மையங்கள் ஆகியவற்றை பெண்களுக்காக கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் அமைப்பதில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாகவும் அவர்; கூறினார்.

சுகாதாரத்துறையில் நாடு உலகில் முன்னணியில் உள்ளது என்பதற்கு கோவிட் தடுப்பூசி இயக்கமே சரியான உதாரணம் என்று[ம் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

திவாஹர்

Leave a Reply