இந்திய விமானப் படையின் ரேடார் நிலையத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டார்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று, இந்திய விமானப் படையின் ரேடார் நிலையத்துக்கு சென்றார். அங்கு ஒருங்கிணைந்த ஏர் கமாண்ட் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பின் செயல்பாடுகளை பார்வையிட்டார். இந்த அமைப்பு, இந்திய விமானப் படையின் முதுகெலும்பாகவும், செயல்பாட்டுக் கருவியாகவும் உள்ளது.

இந்த பயணத்தின்போது, நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட ராணுவ ஒருங்கிணைப்பு நடவடிக்கைள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இதில், போர் விமானங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், போக்குவரத்து மற்றும் ரிமோட் மூலம் இயக்கப்படும் போர் விமானம் ஆகியவை அடங்கும்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply