ஒரு மருத்துவம், ஒரு தரநிலை” என்பதை அடைய, ஆயுஷ் அமைச்சகம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான ஃபார்மகோபயா ஆணையம் (ஆயுஷ் அமைச்சகம்) மற்றும் இந்திய மருந்தியல் ஆணையம் (சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம்) ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் புதுதில்லியில் இன்று கையெழுத்தானது.
இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான ஃபார்மகோபயா ஆணையத்தின் இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் பி.கே.பிரஜாபதி, செயலாளர் மற்றும் அறிவியல்துறை இயக்குநர் திரு.ராஜீவ்சிங் ரகுவன்ஷி ஆகியோர், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டச்சா முன்னிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
அப்போது பேசிய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டச்சா, “இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான ஃபார்மகோபயா ஆணையம், மற்றும் இந்திய மருந்தியல் ஆணையம் ஆகியவற்றுக்கிடையே, ஒருங்கிணைந்த மூலிகை மருந்தின் தரங்களை மேம்படுத்துவதன் மூலம், பொதுசுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான கூட்டு முயற்சி” என்றார். இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான ஃபார்மகோபயா ஆணையமும், இந்திய மருந்தியல் ஆணையமும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், இவைகளுக்கிடையேயான “ஒரு மருத்துவம், ஒரு தரநிலை”க்கான ஒப்பந்தம் அர்த்தமுடையதாக உள்ளது.
திவாஹர்