வனங்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்துவது, இரு நாடுகளுக்கிடையே அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது என்ற கண்ணோட்டத்துடன் நேபாள அரசுடன் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்மொழிவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
வனங்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு தரப்பினரிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.
எம்.பிரபாகரன்