மத்திய தொகுப்பின் கீழ் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 2021-22 கரீப் சந்தை பருவத்தில் நெல் கொள்முதல் சுமூகமாக நடைபெற்று வருகிறது.
30.8.2022 வரை 881.30 லட்சம் மெட்ரிக் டன் ( கரீஃப் பயிர் 759.32 லட்சம் மெட்ரிக் டன், ரபி பயிர் 121.98 லட்சம் மெட்ரிக் டன் உட்பட) நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ.1,72,734.69 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 13.65 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
202-23 ரபி சந்தைப் பருவத்தில் 30.8.2022 வரை 187.92 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 36,866.13 கோடி மதிப்பிலான குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் 17.83 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
எம்.பிரபாகரன்