அ.தி.மு.க.பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா விடுதலை பெற வேண்டி, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் காளியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்து மொட்டை அடித்து அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மதியழகன், ஒன்றிய குழு தலைவர் கணேசன், ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி துணைத்தலைவர் பார்த்தசாரதி, நகர பேரவை செயலாளர் குமார், பேரூராட்சி உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர்கள் இலக்கிய அணி இ.என்.நாராயணன், பேரவை பெருமாள் நகர் ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் வெங்கட்ராமன், வழக்கறிஞர் தினகரன், அந்தனூர் கோவிந்தன் உள்ளிட்டோர் பலர் மொட்டையடித்து கொண்டு வழிபாடு செய்தனர்.
இதே போன்று செங்கம் தாலுக்கா, புதுப்பாளையம் ஒன்றியத்தில் ஜெ.ஜெயலலிதா வழக்குகளில் இருந்து விடுதலையாகி மீண்டும் தமிழக முதல்வராக அமர வேண்டும் என புதூர்செங்கம் ஸ்ரீமாரியம்மன் கோயிலில் மண் சோறு சாப்பிட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். புதூர் செங்கம் ஸ்ரீமாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேக அலங்காரம், தீபாராதனை நடத்தப்பட்டது.
பிறகு அ.தி.மு.க. கட்சியினர் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் மண் சோறு சாப்பிட்டு வழிபாடு செய்தனர். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனாக்கண்ணு, திருவண்ணாமலை தொகுதி எம்.பி. வனரோஜா, புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவர் மீனாகுமாரி புருஷோத்தமன், புதுப்பாளையம் பேரூராட்சி தலைவர் சித்ரா கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய செயலாளர் லட்சுமணன்,செங்கம் ஒன்றிய செயலாளர் மதியழகன், செங்கம் ஒன்றிய குழு தலைவர் கணேசன், மாவட்ட கவுன்சிலர் வெங்கட்ராமன், ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இ.என்.நாராயணன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எஸ்.ஆர். தருமலிங்கம், மாவட்ட பேரவை செயலாளர் பெருமாள் நகர் ராஜன், ஒன்றிய கவுன்சிலர் தவமணி, ஊராட்சி மன்ற தலைவர் பழனிராஜ் மற்றும் நிர்வாகிகள் ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.
-செங்கம் மா.சரவணக்குமார்.