சேலம் மாவட்ட ஆட்சியரின் ஆலோசனையின் பேரில், ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் லாரிகள், டாக்ஸிகள், ஆட்டோக்கள், சாலையோரங்களில் உள்ள கடைகள், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகள் உள்ளிட்டவைகளை அகற்றுவது குறித்து ஏற்காடு தாசில்தார் சாந்தி தலைமையில் ஏற்காடு தாலுக்கா அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் இன்று காலை நடைப்பெற்றது.
ஏற்காடு இன்ஸ்பெக்டர் குமார், ஏற்காடு பி.டி.ஓ. குமார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
அதன்படி இன்று (11.10.2014) மதியம் ஏற்காடு ரவுண்டான பகுதியில் இருந்த விளம்பர பலகைகளை ஏற்காடு தாசில்தார் மற்றும் பி.டி.ஓ ஆகியோர் தலைமையிலான குழுவினர் அகற்றினர். மேலும், சாலையோர கடைகளை நாளை ஒரு நாளுக்குள் அகற்றும்படி கடை உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர்.
-நவீன் குமார்.