ராஜஸ்தானை ஒட்டிய எல்லைப்பகுதியில், சுற்றுலா வளர்ச்சிக்கான கட்டுமானப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.

பாஜக-வின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவின் தேசிய பணிக்குழுக் கூட்டம் ராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூரில் நடைபெறுகிறது.அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா இதில் பங்கேற்கிறார்.

பின்னர், பிஜேபி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் அவர் உரையாற்றவுள்ளார்.முன்னதாக, இன்று காலை ராஜஸ்தான் சென்ற அமித் ஷா, பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்திற்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply