ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையை தொடக்கத்திலேயே நிறுவனங்களுடன் இணைக்க வேண்டும் !-மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்.

ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கையை தொடக்கத்திலேயே நிறுவனங்களுடன் இணைத்து சமமான பங்குதாரராக கொண்டு செயல்பட்டால் தான் நிலையான வளர்ச்சி அடைய முடியும் என்று   பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொது மக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி துறை மற்றும் விண்வெளித்துறை

இணையமைச்சர் (தனிப்பொறுப்பு)

 டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.

குஜராத்தில் உள்ள அகமதாபாத்தில் மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அந்த நிகழ்வின் ஒரு பகுதியாக நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர், மாநிலங்களில் புத்தாக்க மையங்களை ஏற்படுத்த மத்திய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் என்றார்.

ஆராய்ச்சி , ஸ்டார்ட் அப் இந்தியா நடவடிக்கை, பாடத்திட்டங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் போன்றவற்றை ஒருங்கிணைத்தால் தான் இளம் புத்தாக்க சிந்தனை கொண்டவர்களை ஈர்க்க முடியும் என்றும் அவர்கள் மூலமே புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பொருட்களை தயாரித்து உலகிற்கு சவால் விட முடியும் என்று மத்திய அமைச்சர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply