இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ்—க்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து.

இங்கிலாந்து பிரதமராக பதவியேற்றுள்ள லிஸ் டிரஸ்—க்கு பிரதமர் நரேந்திர மோதி தொலைபேசி வாயிலாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.அப்போது இரு தலைவர்களும் இந்தியா – இங்கிலாந்து நாடுகளிடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், பாதுகாப்பு, மக்கள் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் மறைவிற்கு இந்திய மக்கள் சார்பாக தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் நரேந்திர மோதி இங்கிலாந்து பிரதமரிடம் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply