ஏற்காடு காவல் நிலைய வளாகமானது கடந்த சில வருடங்களாகவே தூய்மைப்படுத்தப்படாமல் இருந்து வந்தது. மேலும், இந்த இடம் முழுவதும் முட்புதர்கள், பார்த்தீனியம் செடிகள் அதிகளவில் வளர்ந்து அசுத்தமாக இருந்தது.
இந்நிலையில் ஏற்காடு மலைப்பாதுகாப்பு அறக்கட்டளையினர் அதன் இயக்குனர் ஹரி மற்றும் கண்ணன் உள்ளிட்டோர் தலைமையில் 20-க்கும் மேற்ப்பட்டோர் மற்றும் காவல் துறையினர் சிலருடன் இணைந்து காவல் நிலைய வளாகத்தில் இருந்த முட்புதர்கள், செடிகள் உள்ளிட்டவைகளை அகற்றி சுத்தம் செய்தனர்.
-நவீன் குமார்.