தமிழக விளையாட்டு வீரர்கள் தடைகளை தகர்த்து சாதனைகளை படைக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக விளையாட்டு வீரர்கள் தடைகளை தகர்த்து சாதனைகளை படைக்க வேண்டுமென்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.
இன்று சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கும், வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்களுக்கு விருதுகளை வழங்கி அவர் பேசினார்.

அடுத்த 6 மாதங்களில் தமிழகத்தில் பல்வேறு சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழ்நாடு விளையாட்டுத்துறையில் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டில் பயிற்சி வழங்கப்படும் என்றும் மு க ஸ்டாலின் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்களுக்கு சுமார் 16 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகைக்கான காசோலைகளையும் ஸ்டாலின் வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply