தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சங்கங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளது -மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.

தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சங்கங்களாக மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அம்ரேலியில் கூட்டுறவு சங்கங்களின் கூட்டத்தில் பேசிய அவர், இதற்கான சட்டங்கள் வகுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதாக கூறினார்.

நாடு முழுவதும் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டறவு கடன் சங்கங்களின் எண்ணிக்கையை அடுத்த 5 ஆண்டுகளில் 65 ஆயிரத்திலிருந்து 3 லட்சமாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

இயற்கை உரங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட பொருட்களை சந்தையிட பல்வேறு மாநிலங்களில் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை உருவாக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் கூறினார். 

எம்.பிரபாகரன்

Leave a Reply