எதிர்கால பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளவும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்லவும் வலுவான, பாதுகாப்புடன் விரைவான தற்சார்புடன் கூடிய சரக்கு போக்குவரத்து முறையை உருவாக்க அரசு உறுதிபூண்டுள்ளது. புதுதில்லியில் செப்டம்பர் 12, 2022 அன்று நடைபெற்ற முதலாவது இந்திய ராணுவ சரக்கு போக்குவரத்து கருத்தரங்கில் முக்கிய உரையாற்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதனைத் தெரிவித்தார்.
உலகப் பொருளாதாரத்தில் இந்தியா இன்று 5-வது மிகப் பெரிய நாடாக திகழ்கிறது என்று கூறினார். 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி இது விரைவாக சென்று கொண்டிருக்கிறது என்றும் எதிர்காலத்தில் போர் களத்திலோ அல்லது பொதுமக்களிடையிலோ சரக்கு போக்குவரத்தின் அம்சம் அதிகரிக்கப் போகிறது என்றும் அவர் கூறினார். இச்சூழ்நிலையில், 21-ம் நூற்றாண்டின் தேவையின் அடிப்படையில் சரக்கு போக்குவரத்து முறையை மறு சீரமைப்பது அவசியம் என்று கூறினார். இந்நோக்கங்களை அடைய தற்சார்பு சரக்கு போக்குவரத்து முறை தேவை என்று ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
எஸ்.சதிஸ் சர்மா