ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் அண்ணா பூங்காவை ஒட்டி செயல்பட்டு வருகிறது ராம்ஸ் இன் எனும் தனியார் தங்கும் விடுதி. இங்கு இன்று மதியம் ஆள்துளை கிணறு ஒன்று தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
இந்த இடம் முழுவதும் பாறை துகள்கள் பறந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. இந்த இடம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் நடமாடும் இடம் என்பதால் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பி.டி.ஓ துளசி ராமன், கிராம நிர்வாக அலுவலர் பாஸ்கர் ஆனந்த, சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் உள்ளிட்டோர் ஆள்துளை கிணறு தோண்டுவதை உடனடியாக நிறுத்த உத்தரவிட்டனர்.
-நவீன் குமார்.