திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பேரிடர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செங்கம் தாலுக்கா அலுவலகத்திலிருந்து தொடங்கிய பேரணியை தாசில்தார் தினகரன் தொடங்கி வைத்தார்.
இதில் செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பளி, சகாயமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பாலு, தலைமை ஆசிரியர் கார்த்திகேயன், வருவாய் ஆய்வாளர் மணவாளன், கிராம நிர்வாக அலுவலர்கள் பழனி, கிருஷ்ணமூர்த்தி, சங்கமித்ரா, சத்யா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது. செங்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையில் தீயணைப்பு படையினர் விபத்துகளிலிருந்து காப்பாற்றுவது குறித்து பொது மக்களுக்கு செயல் விளக்கம் செய்து காட்டினர். பேரணி துக்காப்பேட்டை புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.
-செங்கம் மா.சரவணக்குமார்.