தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரியில் உலக உணவு தினத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இவ்வழிபாட்டின் இறுதியில் உணவு தின உறுதிமொழியை கல்லூரி மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் எடுத்தனர்.
இவ்வழிபாட்டில் சிறப்பு விருந்தினராக தூத்துக்குடியின் அட்சயபாத்திரமாக கருதப்படும் “Natural Charity trust”- ன் ராஜாராம் கலந்து கொண்டு தன்னுடைய அனுபவங்களை மிகவும் தெளிவாகவும், ஆழமாகவும் மாணவிகளிடையே பகிர்ந்து கொண்டார்.
தூத்துக்குடியில் மனநிலை சரியில்லாமல் பிச்சை எடுக்கும் ஒருவர் கழிவு நீர் கால்வாயில் உள்ள உணவை உண்பதை பார்த்து, மனம் பொறுக்க முடியாமல் அவருக்கு 4- இட்லியை ராஜாராம் வாங்கி கொடுத்த போது, அம்மனிதனின் முகத்தில் அவர் இறைவனை கண்டாராம்.
எனவே தொடர்ந்து இப்பணியை அவர் தூத்துக்குடியில் செய்து வருவதை கூறிய போது இதை கேட்ட அனைவரின் நெஞ்சமும் நெகிழ்ந்தது.
இவர் 18 ஆண்டு காலமாக குடும்பத்தினருடன் இணைந்து தான் உண்பதற்கு முன்பாக, பசித்தவருக்கு உணவு வழங்குவதை தன் கடமையாக செய்து வருகிறார்.
இப்பணிக்கு தூய மரியன்னை கல்லூரி சார்பாக உதவி வழங்கப்பட்டது.
-பி.கணேசன் @ இசக்கி.