திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த பிஞ்சுர் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சந்திரிகா தலைமை தாங்கினார். பள்ளி உதவி ஆசிரியர் ராஜவேலு அனைவரையும் வரவேற்று பேசினார். உதவி தொடக்க கல்வி அலுவலர் லோகநாயகி மற்றும் கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி மாணவர்கள் அறிவியல் கண்காட்சியில் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
உதவி தொடக்க கல்வி அலுவலர் லோகநாயகி அறிவியல் கண்காட்சியை பார்வையிட்டு மாணவர்களிடையே ஆய்வு மனப்பான்மை மேம்படுத்தவும், அறிவியல் கண்ணோட்டத்தை வளர்க்கவும் இந்த கண்காட்சி அமைகின்றது. மாணவர்கள் விழிப்புணர்வோடு செயல்படவேண்டும் என்று கூறினார்.
-செங்கம் மா.சரவணக்குமார்.