தமிழ்நாட்டிற்காக பல சாதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்கள், நீங்கள் மீண்டும் மாநிலத்தின் நிர்வாகத் தலைமையை ஏற்க வேண்டும்: ஜெ.ஜெயலலிதாவுக்கு, மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம்!

மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி

மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு மத்திய மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ”உங்களது நிலைக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்கு எனது அனுதாபமும், ஆதரவும் உண்டு. உங்களது துயரத்தைக் குறைப்பதற்காக நான் ஏதேனும் செய்ய வேண்டியிருந்தால், அதை மகிழ்ச்சியோடு செய்வேன்.

menaga gandhiஉங்களது வாழ்க்கையில் பெரிய துயரங்களைச் சந்தித்திருக்கிறீர்கள். அப்போதெல்லாம், ஒழுக்கம், துணிவு ஆகியவற்றின் மூலம் நீங்கள் அதிலிருந்து மீண்டு வந்திருக்கிறீர்கள். இந்தச் சோதனையான காலக்கட்டம் விரைவில் நீங்கி, நீங்கள் மீண்டும் மாநிலத்தின் நிர்வாகத் தலைமையை ஏற்க வேண்டும் என விரும்புகிறேன்.

தமிழ்நாட்டிற்காக பல சாதனைகளை நீங்கள் செய்திருக்கிறீர்கள். உங்களது உடல் நலத்தில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். நாடு முழுவதும் உங்களது அபிமானிகள் நிறைய பேர் உள்ளனர் என்பதை நினைவில் வைத்திருங்கள்” இவ்வாறு தனது கடிதத்தில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி குறிப்பிட்டுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in