இந்தியா வந்துள்ள இலங்கை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, டெல்லியில் இந்திய நிதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் அருண் ஜேட்லியையும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும் சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். இன்று (20.10.2014) இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
இச்சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு மற்றும் உறவுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
பிரதமர் நரேந்திரமோதி தலைமையிலான அரசு பதவி ஏற்ற பின்னர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொள்ளும் முதலாவது இந்திய பயணம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஆர்.அருண்கேசவன்.