இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என சுப்பிரமணியன் சுவாமி, பிரதமர் நரேந்திர மோதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுதொடர்பாக நரேந்திர மோதிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ”விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மகிந்த ராஜபக்சே பங்காற்றியுள்ளார். எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கவுரவிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
மேலும், ”நான் எழுதிய கடிதம் பிரதமர் நரேந்திர மோதிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது” என்றும் சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.