பாதுகாப்பு தளவாட கண்காட்சி 2022-க்கு இடையே இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு தொடர்பான பேச்சுக்கள் குஜராத் மாநிலம் காந்திநகரில் அக்டோபர் 18, 2022 அன்று நடைபெற்றது.
அப்போது இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்பு பரிமாற்றத் திட்டத்தை பாதுகாப்பு அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். அதற்கான கையேட்டை வெளியிட்ட அவர் அதனை பாதுகாப்பு படிப்பு மற்றும் பகுப்பாய்வுக்கான மனோகர் பாரிக்கர் நிறுவனத்தின் தலைமை இயக்குனரிடம் ஒப்படைத்தார்.
இந்த பரிமாற்றத் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட ஆப்பிரிக்க அறிஞர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும். அத்துடன் அவர்களுக்கு உதவித் தொகையும் வழங்கப்படும்.
திவாஹர்