குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று (26.10.2022) நடைபெற்ற நிகழ்ச்சியில், உகாண்டாவின் துணைத் தூதர் மற்றும் வியட்நாம், ஈரான், ஸ்வீடன், பெல்ஜியம் தூதர்களின் நியமன உத்தரவுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக் கொண்டார். தங்களின் நியமன உத்தரவுகளை சமர்ப்பித்தவர்களின் விவரம்:
- மேன்மைதங்கிய திருமதி ஜாய்ஸ் கக்குராமட்ஸி கிகாபண்டா, உகாண்டா குடியரசின் துணைத் தூதர்
- மேன்மைதங்கிய திரு நகுயன் தான் ஹய், வியட்நாம் சோஷலிச குடியரசின் தூதர்
- மேன்மைதங்கிய டாக்டர் இராஜ் இலாஹி, ஈரான் இஸ்லாமிய குடியரசின் தூதர்
- மேன்மைதங்கிய திரு ஜேன் தெஸ்லெஃப், ஸ்வீடன் தூதர்
- மேன்மைதங்கிய திரு டிடைர் வந்தேர்ஹேசெல்ட், பெல்ஜியம் அரசின் தூதர்.
எம்.பிரபாகரன்