புது வாழ்வு திட்ட அலுவலகங்களில் சேலம் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு!

ye2410P1சேலம் மாவட்டம், ஏற்காடு தாலுக்காவில், ஏற்காடு டவுன், மஞ்சக்குட்டை, வெள்ளக்கடை, செம்மநத்தம், நாகலூர், வாழவந்தி, தலைச்சோலை, மாரமங்களம், பட்டிப்பாடி உள்ளிட்ட 9 ஊராட்சிகள் உள்ளன.

ஏற்காடு தாலுக்காவில் மொத்தம் 22 புது வாழ்வு திட்ட வறுமை ஒழிப்பு சங்க அலுவலகங்கள் உள்ளன. இந்த அலுவலகங்களில் சேலம் மாவட்ட ஆட்சியர் மகரபூஷணம் திடீர் ஆய்வு செய்தார்.

சங்க உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களிடம் கலந்துரையாடி புதுவாழ்வு திட்டத்தின் பயன்களை பற்றி விசாரித்தார்.

புது வாழ்வு திட்டத்தின் மூலம் கடனுதவி பெறுவதால் கந்து வட்டிக்கு கடன் வாங்கி அனுபவித்து வந்த சித்திரவதைகளில் இருந்து விடுப்பட்டதாக மக்கள் கூறினார்கள்.

பின்னர் யூனியன் மூலம் கட்டப்பட்ட தனிநபர் கழிப்பிடங்களையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

-நவீன் குமார்.