குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு ஐஸாலில் உள்ள மிசோரம் பல்கலைக்கழகத்தின் 17வது பட்டமளிப்பு விழாவை சிறப்பித்தார். (நவம்பர் 3, 2022) அத்துடன், மிசோரம் பல்கலைக்கழகம், மௌல்புயில் உள்ள அரசு கல்லூரிகளின் பழங்குடியின மாணவிகளுக்கான உண்டு, உறைவிட விடுதிகள், இந்திய மக்கள் தொடர்பியல் கழகத்தின் நிரந்தர வளாகம் மற்றும் பச்சுங்கா பல்கலைக்கழக கல்லூரியில் முதுநிலை கல்விப் பிரிவுக்கான கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு கல்வி தொடர்புடைய திட்டங்களை அவர் காணொலி காட்சி வாயிலாக தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், கடந்த 2001ம் ஆண்டு தொடங்கப்பட்ட மிசோரம் பல்கலைக்கழகம் என்று வடகிழக்கு பிராந்தியத்தில் முக்கிய பல்கலைக்கழகமாக திகழ்வது மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டார். அறிவியல், கலை, வணிகவியல், பொறியியல் மற்றும் மருத்துவ அறிவியல் துறைகளில் இப்பல்கலைக்கழகம் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளதாக கூறினார். புதுமை கண்டுபிடிப்புகளை அளிப்பதற்கும் மற்றும் மாணவர்களுக்கு நடைமுறை பயிற்சிகளை வழங்குவதற்கும் மிசோரம் பல்கலைக்கழகத்தில் மூன்று பிரிவுகள் உள்ளதாக தெரிவித்தார். கல்வி மற்றும் தொழில்நுட்பத்திற்காக தேசிய மற்றும் சர்வதேச அளவில் பல்வேறு பல்கலைக்கழகங்கள் மற்றும் அமைப்புகளுடன் இப்பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.
எஸ்.சதிஸ் சர்மா