தூத்துக்குடி மேலூர் இரயில் நிலைய புதுப்பித்தல் மற்றும் விரிவாக்கப் பணிகளை தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனம் மேற்கொண்டது. அதன்படி நடைபாதை மற்றும் பலகைகள், டிக்கட் கவுண்டர் போன்றவைகளை புதுப்பித்து புதிய வர்ணம் பூசி அழகு படுத்தியது.
ஆனால் இருப்புப் பாதை செல்கின்ற வழிப்பாதை முழுவதும் குடியிருப்போர் வீசியெறிந்த பிளாஸ்டிக் குப்பை, கூளங்கள் மற்றும் சாக்கடை கழிவு நீர், மழை நீர் தேங்கி சுற்றுப்புறம் மிகவும் சீர்கேடு அடைந்துள்ளது. சாக்கடை நீர் குடிநீருடன் கலப்பதால் குடிநீர் மாசு அடைந்துள்ளது.
பாரத பிரதமர் அறிவித்துள்ள ‘தூய்மை இந்தியா’ திட்டம் தூத்துக்குடி மேலூர் இரயில் நிலையத்தை தூய்மை செய்யுமா?
-பி.கணேசன் @ இசக்கி.