2020 -21ம் ஆண்டு நிதியாண்டை விட, கடந்த நிதியாண்டு இந்திய மருந்து உற்பத்தி கழக நிறுவனம் பெருமளவு லாபத்தை ஈட்டியுள்ளது.

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்திய மருந்து உற்பத்தி கழக நிறுவனம் அதன் பங்குதாரர்களான ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உத்ரகண்ட் மாநில அரசுக்கு ஈவுத் தொகையாக 10.13 கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளது. இது ஆயுஷ் அமைச்சகத்திற்கான ஈவுத்தொகை ரூ.9.93 கோடிக்கான காசோலை மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனாவாலிடம் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு சர்பானந்த சோனாவால், 2020 -21ம் ஆண்டு நிதியாண்டை விட, கடந்த நிதியாண்டு இந்திய மருந்து உற்பத்தி கழக நிறுவனம் பெருமளவு லாபத்தை ஈட்டியுள்ளது சிறந்த சாதனை என்று குறிப்பிட்டார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply