கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை 2-ம் கட்ட சிறப்பு இயக்கத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது.

கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை 2-ம் கட்ட சிறப்பு இயக்கத்தை அக்டோபர் 2-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி, 2022 வரை வெற்றிகரமாக மேற்கொண்டது. 2-ம் கட்டத் தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் வந்து செல்லும் களம் மற்றும் வெளி அலுவலகங்கள் உட்பட 165 பகுதிகளில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினரின் பரிந்துரைகள் போன்ற பல்வேறு வகைகளில் நிலுவையில் இருந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு விவகாரங்களுக்கு தீர்வு காணப்பட்டது.

2-ம் கட்ட இயக்கத்தின்போது, அமைச்சகம் மற்றும் அது சார்ந்த அலுவலகங்களில் ஆய்வு செய்யப்பட்ட 21, 072 கோப்புகளில் 16, 834 கோப்புகள் களையப்பட்டது.

மொத்தம் 84 பொதுமக்கள் குறைதீர்ப்பு முறையீடுகளில் 82 முறையீடுகளுக்கு தீர்வு காணப்பட்டன.

எம்.பிரபாகரன்

Leave a Reply