மத்திய மீன்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் ஐதராபாத்தில் இயங்கும் தேசிய மீன்வளத்துறை வாரியத்திற்கு, 2022க்கான இந்திய-வேளாண்தொழில் விருது வழங்கப்பட்டது.
மத்திய அரசின் இந்திய உணவு மற்றும் வேளாண் சபையானது, தேசிய மற்றும சர்வதேச தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு ஆகும்.
இந்த சபையின் சார்பில், புதுதில்லியின் பூசா வளாகத்தில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில், இந்திய-சர்வதேச வேளாண் வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பக் கண்காட்சி 2022 நடைபெறுகிறது. நவம்பர் 9ம் தேதி தொடங்கிய இந்தக் கண்காட்சி நவம்பர் 11ம் தேதி நிறைவடைய உள்ளது.
இந்தக் கண்காட்சியில், உணவு, வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை பராமரிப்பு, மீன்வளம் மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள நவீன சாதனைகளை விளக்கும் தயாரிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, ஐதராபாத்தில் இயங்கும் மத்திய அரசின் தேசிய மீன்வள வாரியத்திற்கு 2022க்கான இந்திய- வேளாண் தொழில் விருது வழங்கப்பட்டது. இதனை மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் திரு.சஞ்ஜீவ் குமார் பால்யன், நித்தி ஆயோக் உறுப்பினர் திரு. ரமேஷ் சந்த் ஆகியோர் வழங்க, விருதை தேசிய மீன்வள வாரியத்தின் தலைமை நிர்வாகி சுவர்னா சந்திரப்பாகரி பெற்றுக்கொண்டார்.
எம்.பிரபாகரன்