திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா ஜாமீன் பெற்று வந்தமைக்கும், தொடர்ந்து வழக்குகளில் இருந்து விடுதலை பெற்று தமிழக முதல்வராக மீண்டும் பொறுப்பு ஏற்க வேண்டியும் செங்கம் செய்யாற்றங்கரையில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயிலில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் மதியழகன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் கணேசன் முன்னிலை வகித்தார். ஒன்றிய பேரவை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.
நடைபெற்ற சிறப்பு வேள்வியில் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சரும், மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் கீழ்பென்னாத்தூர் அரங்கநாதன், செங்கம் சுரேஷ்குமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நைனாக்கண்ணு, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியம் மாநில தலைவர் அமுதா அருணாச்சலம், ஒன்றிய குழு தலைவர்கள் புதுப்பாளையம் மீனாகுமாரி புருஷோத்தமன், தண்டராம்பட்டு ஜானகிராமன் மற்றும் திருவண்ணாமலை தொகுதி எம்.பி. வனரோஜா, மாவட்ட அணி செயலாளர்கள் இலக்கிய அணி இ.என்.நாராயணன், பேரவை பெருமாள் நகர் ராஜன், எம்.ஜி.ஆர். மன்றம் எஸ்.ஆர். தருமலிங்கம், மாணவர் அணி உஷாநாதன், தலைமைக்கழக பேச்சாளர் வெங்கட்ராமன், இணை செயலாளர் ஜெயக்குமார்,நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் எ.ஜி.ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் நகர பேரவை செயலாளர் குமார் நன்றி கூறினார். சிறப்பு வேள்வியின் முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
-செங்கம் மா.சரவணக்குமார்.