திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் டவுன், தளவாநாயக்கன்பேட்டை, காமராஜ் நகரில் அஸ்-சையத் ஜாமியா மஸ்ஜித் என்ற புதிய மசூதி திறப்பு விழா நடைபெற்றது.
விழாவுக்கு மில்லத் நகர் முத்துவல்லி சர்தார் கலிமுல்லா தலைமை தாங்கினார். புதிய மசூதி நிர்வாகிகள் அப்துல்சத்தார், கரீம், அபாஜான், அன்வர், பயாஸ், பாதுஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மில்லத் நகர் ஜமாத் பொருளாளர் சபியுல்லா வரவேற்று பேசினார். மில்லத் நகர் பட்டேல் அப்துல் ரகிமான் புதிய மசூதியை திறந்து வைத்தார். முடிவில் சர்தார் ரூஹ_ல்லா நன்றி கூறினார். விழாவில் கடலாடி பட்டேல் ஷேக் சுபேதர், முன்னாள் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா, முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் அப்துல் சத்தார், பேரூராட்சி உறுப்பினர் அப்துல் வாகித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திறப்பு விழா முடிவில் சிறப்பு தொழுகையும், விருந்தும் மசூதி வளாகத்தில் நடைபெற்றது.
– செங்கம் மா.சரவணக்குமார்.