கடலூர் மாவட்டம், காட்டுமன்னார் கோவில் தாலுக்கா, நாட்டார் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் மணிரத்னம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக ஞானதேசிகன் இருந்தபோது காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு அளிக்காத காரணத்தினால், அக்கட்சியில் இருந்து விலகி பா.ம.க.வில் இணைந்தார். சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனுக்கு போட்டியாக பா.ம.க. சார்பில் மணிரத்னம் களம் இறக்கப்பட்டார்.
ஒரு அரசியல் கட்சியின் வேட்பாளர் எனில், அவரது வேட்பு மனுவை 10 பேர் முன்மொழிந்திருக்க வேண்டும். அவ்வாறு மணிரத்னத்தின் வேட்பு மனுவில் 10 பேர் முன்மொழியவில்லை என்று கூறி, அவரது 4 வேட்பு மனுக்களையும் தேர்தல் அதிகாரி சரவணவேல்ராஜ் தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில், பா.ம.க.வின் மாற்று வேட்பாளராக மணிரத்னத்தின் மனைவி சுதாவின் வேட்பு மனுவை பரிசீலித்த தேர்தல் அதிகாரிகள், அந்த மனுவை ஏற்றுக் கொள்வதாக அறிவித்தனர்.
இந்நிலையில் தற்போது மணிரத்னம் பா.ம.க.வில் இருந்து விலகி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் இன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். பணமும், பசையும் இருந்தால் யார் எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் இடம் மாறலாம்.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in