பாராமெடிக்கல் லேப் கல்வி மற்றும் நலச்சங்கத்தின் மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா!

ye1611P5

ஏற்காட்டில் பாராமெடிக்கல் கல்வி லேப் மற்றும் நலச்சங்கத்தின், தமிழக மாநில நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைப்பெற்றது.

இவ்விழாவில் துரைசாமி மாநில தலைவராகவும், விஜயகுமார் மாநில பொதுச் செயலாளராகவும், சம்பத் குமார் மாநில பொருளாளராகவும், மேலும் 18 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்த விழாவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளின் பதவி காலம் 2 ஆண்டு எனவும், பரிசோதனை கூடங்களில் பயன்படுத்தும் பொருட்களுக்கு தரக்கட்டுப்பாடு அவசியம் எனவும், லேப் டெக்னீசியன்ஸ்களுக்கு தனி நலவாரியம் அமைக்க அரசாங்கத்தை வலியுறுத்துவது, மருந்து கடைகள், ஹோட்டல்களில் பரிசோதனைகள் செய்வதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றினர்.

இதில் வெங்கட சுப்ரமணியம், காளிதாசன், பாக்கியராஜ், தியாகராஜன், ராஜா ஆகியோர் கலந்துக்கொண்டனர். 

-நவீன் குமார்.