கொழும்பில் எதிர்வரும் 27 ம் தேதி முதல் 29 ம் தேதி வரை சார்க், ஆசியான் நாடுகளின் கூட்டமைப்பு (SASEAN) சார்பில், இராணுவ தளபதிகள் பங்கேற்கும் மாநாடு நடைபெறவிருக்கின்றது. இந்த மாநாட்டில் இந்திய இராணுவ தளபதி தல்பீர் சிங் பங்கேற்க உள்ளார்.
இந்த மாநாட்டில் பங்கேற்க இந்தியா, பாகிஸ்தான், மாலத்தீவு, புருணே உள்ளிட்ட 18 நாடுகளின் இராணுவ தளபதிகள் ஒப்புதல் தெரிவித்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
drduraibenjamin@yahoo.in