சேலம் மாவட்டம், ஏற்காட்டில் உள்ள ஜி.ஆர்.டி. ஹோட்டல் ஊழியர்கள், ஏற்காட்டின் முக்கிய பகுதிகளான படகு இல்லம், அண்ணா பூங்கா, ஒண்டிக்கடை உள்ளிட்ட பகுதிகளை சுத்தம் செய்தனர். அதற்கு முன்னர் அனைத்து ஊழியர்களும் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
அப்போது பேசிய ஹோட்டல் பொது மேலாளர் முகமது செரீப், மேற்குறிப்பிட்ட பகுதிகளை தத்தெடுப்பதாகவும், மேலும், இந்த பகுதிகளை வாரத்திற்கு 3 நாட்கள் சுத்தம் செய்யப்போவதாகவும் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் சுப்ரமணி, ஏற்காடு வட்டாட்சியர் சாந்தி, ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் முரளி, ஏற்காடு காவல் ஆய்வாளர் குமார், ஏற்காடு பி.டி.ஓ.க்கள் ஜெயராமன், துளசி ராமன் ஆகியோர் கலந்துக்கொண்டு சுத்தம் செய்தனர்.
-நவீன் குமார்.