காவல்துறை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு வார விழா!

IMAGE 01 IMAGE 02

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் காவல்துறை சார்பில் தேசிய ஒருமைப்பாட்டு வார விழாவை முன்னிட்டு பேரணி மற்றும் “தேசிய ஒருமைப்பாட்டில் மொழியின் பங்கு” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டையும், மொழிப்பற்றையும் வலியுறுத்தி புதிய பஸ்நிலையம் அருகில் இருந்து புறப்பட்ட பேரணியை, மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி தொடங்கி வைத்தார்.

செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட பேரணி போளுர் ரோடு, ராஜவீதி ஆகிய முக்கிய தெருக்களின் வழியாக சென்று, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நிறைவு பெற்றது.

அங்கு நடைபெற்ற கருத்தரங்கிற்கு மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் கே.எஸ். சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். செங்கம் காவல் ஆய்வாளர் பூபதி வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் செங்கம் தாசில்தார் பொறுப்பு மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஜெயபிரகாஷ், முதுகலை தமிழ் ஆசிரியர் மணிமாறன், ஆன்மீக சொற்பொழிவாளர் தனஞ்செயன் ஆகியோர் தேச ஒருமைப்பாடு அதில் மொழிகளின் பங்கு, தமிழ் மொழியின் சிறப்பு போன்றவற்றை வலியுறுத்தி பேசினர்.

முடிவில் உதவி காவல் ஆய்வாளர் சுந்தரேசன் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் செங்கம் காவல்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

– செங்கம். மா.சரவணக்குமார்.