அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது வழக்கு போட்டிருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.

முன்னாள் தமிழக முதல்வர், அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மீது வழக்கு போட்டிருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டது.

இத்தகைய தி.மு.க அரசின் தவறான நடவடிக்கைகளை மக்கள் உற்று கவனித்து கொண்டிருக்கிறார்கள் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும். நேற்றைய தினம் விமான நிலைய பேருந்தில் நடந்த அநாகரிக சம்பவத்திற்கு காரணமான பிரமுகரை விசாரனை செய்யாமல், கைது செய்யாமல், உண்மையை வெளிக்கொண்டு வராமல், அதற்கு மாறாக, முன்னாள் முதல்வர் அவர்கள் மீதும், அவர்களுக்கு பாதுகாப்புக்கு சென்றவர்கள் மீதும் வழக்கு போடுவது அநாகரிகமானது, நியாயமற்றது.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத் தேர்தலுக்கு பிறகு தி.மு.கவின் பல்வேறு சூழ்ச்சிகளையும் தாண்டி அ.தி.மு.கவினுடை, வளர்ச்சியும், வாக்கு வங்கியும் மக்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவற்றை குலைப்பதற்கான, முறியடிக்க கூடிய முயற்சியாகவே இது தெரிகிறது. இதுபோன்ற செயல்களை தமிழ் மாநில காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது.

கே.பி.சுகுமார்

Leave a Reply