பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்புப் பேரணி: தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் நடைப்பெற்றது!  

???????????????????????????????

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை எதிர்ப்பு தினப் பேரணி, தூத்துக்குடி மரியன்னை கல்லூரியில் 25.11.2014 அன்று நடைப்பெற்றது.

இதில் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுமிதா கலந்து கொண்டு பேரணியை துவக்கி வைத்தார்.

மரியன்னை கல்லூரியில் இருந்து புறப்பட்ட பேரணி புனித பனியமாதா பேராலயத்தில் நிறைவடைந்தது.

இப்பேரணியில் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கருப்பு உடை அணிந்து கலந்து கொண்டனர்.

மேலும், பேரணி மார்க்கத்தில் ஜிம்கானா கிளப் மற்றும் தந்தி அலுவலகம் முன்பு  பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் குறித்து மாணவிகள் தத்துருவமாக செய்துக்காட்டினர்.

-பி.கணேசன் @ இசக்கி.